தீபாவளி பண்டிகை! தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்!

0 2982

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையின் போது மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

சென்னையில் உள்ள அரசு பேருந்துகளில் CCTV கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments